Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை 5 மாதங்கள் இடைநிறுத்தப்படுகிறது!

பழுதடைந்த புகையிரத பாதையை சீரமைக்கும் வரை ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று (28) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மஹவயில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் புகையிரதத்தை நிறுத்த வேண்டும்.

புகையிரத பாதை திருத்தப்படாததால் மஹவயில் இருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது 5 மாதங்களில் முடிக்கப்படும். அதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு நல்ல ரயில் சேவையை வழங்க முடியும்.நல்ல ரயில் பாதையை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடற்படையின் இலவச பல் மருத்துவ முகாம்

east tamil

750,000 அரசு ஊழியர்களுக்கு ஆபத்து – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை

east tamil

இனவாத அரசியலின் பிரதிபலிப்பு: ஜேவிபியின் முகத்தை வெளிப்படுத்தும் கஜேந்திரகுமார்

east tamil

வறுமை கல்விக்கு தடையாக அமையக்கூடாது – வடக்கு ஆளுநர்

east tamil

வடமேல் மாகாணத்தில் விசேட குற்றத்தடுப்பு பிரிவு – ஆனந்த விஜேபால

east tamil

Leave a Comment