26.1 C
Jaffna
December 12, 2024
Pagetamil
கிழக்கு

கிண்ணையடி கிராம மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பு கோறளைப்பற்று கிண்ணையடி கிராமத்தில் அமைக்கப்படும் மீன் பண்ணை மற்றும் மணல் அகழ்வை தடை செய்யக் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் மக்கள் இன்று ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு கிண்ணையடி பிராதான வீதியில் இருந்து ஆரம்பமான போராட்டமானது ஊர்வலமாக வந்து பிரதேச செயலகத்தினை வந்தடைந்தது. ஊர்வலத்தில் வந்தோர் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு பிரதான வீதி வழியாக வாழைச்சேனையை வந்தடைந்தனர்.

அங்கு கூடியவர்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நின்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது மீன்வளர்ப்பு திட்டதை ரத்துச் செய், எமது மண் எமக்கு வேண்டும், அள்ளாதே அள்ளாதே மணலை அள்ளாதே என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் பிரதேச செயலக வளவினுள் சென்று கோஷங்களை எழுப்பினர். உதவி பிரதேச செயலாளரிடம் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை சமர்ப்பித்தனர்.

மகஜரை வாசித்து அறிந்து கொண்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிரிந்தன் தங்களது கோரிக்கை தொடர்பான விடயத்தினை தமது மேலதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் தங்களது போராட்டம் தொடர்சியாக இடம்பெறும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கிண்ணையடி கிராமத்தில் வில்லுக் குளம் ஊடாகவும் தனியார் காணி ஊடாகவும் மீன் பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மீன் அமைக்கும் போர்வையில் தங்களது கிராமத்து மண் வளங்கள் எண்ணிக்கையில்லாமல் வெளி மாவட்டங்களுக்கு இரவோடு இரவாக கணரக வாகனங்களில் அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்லப்படுகிறது என்றும் இதனை கருத்தில் கொண்டு மீன் பண்ணை அமைக்கும் திட்டத்தினை ரத்து செய்து தருமாறு பிரதேச மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையில் இடம் பெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழா

east pagetamil

அம்பாறையில் போராட்டம்

Pagetamil

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக திரு.குமாரசிங்கம் குணநாதன் நியமிப்பு

east pagetamil

உரிமை கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

east pagetamil

மலேசிய தூதுவருடன் கிழக்கு மாகாண ஆளுனரின் சந்திப்பு

east pagetamil

Leave a Comment