வவுனியாவில் கடந்தவாரம் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரின் மனைவிக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டநிலையில் இன்று சாவடைந்துள்ளார்.
வவுனியா வடக்கு அனந்தர்புளியங்குளம் பகுதியைசேர்ந்த முதியவர் ஒருவர் சுகவீனம்காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிலநாட்களிற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அந்தபரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக வெலிக்கந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தநிலையில் மரணமடைந்துள்ளார்.
இதேவேளை அவரதுமனைவி பிள்ளைகள் உறவினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த முதியவரின் மனைவிக்கு கொரோனாதொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் கொழும்பு
கோமாகம வைத்தியசாலையில் இன்று சாவடைந்துள்ளார்.
இதேவேளை அவரது கணவனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டிருந்த சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.