வத்தளை பிரீத்திபுர கடற்கரையில் முச்சக்கரவண்டியில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் விமானப்படை வீரர் வத்தளை பொலிஸாரால் புதன்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை, ஹெந்தலை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இந்தக் குற்றம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்று விசாரணைகளை மேற்கொண்டு 26 வயதுடைய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, தாங்கள் நண்பர்கள் என்றும், இருவரது சம்மதத்தின் பேரில்தான் எல்லாம் நடந்ததாகவும் கூறியிருந்தார்.
எனினும், 16 வயதிற்குட்பட்ட சிறுமியுடன் விருப்பத்துடன் உடலுறவு கொண்டாலும், அது பலாத்காரமாகவே கருதப்படும் என போலீசார் அவரிடம் விளக்கம் அளித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1