தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டதாக குறிப்பிட்டு நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட அரசியல் கைதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 34வது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு விடுதலைப் புலி உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை (21) விடுவிக்கப்பட்டனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொண்ட இரண்டு விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் மற்ற இருவரும் விடுவிக்கப்பட உள்ளனர்.