24.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இந்தியா

2 முறை கொல்ல முயன்றேன்: மாணவியை ரயில் முன் தள்ளிக் கொன்ற சைக்கோ காதலன்!

சென்னையில் ஓடும் ரயில் முன்பு கல்லூரி மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதல் தகராறு முற்றி, ரயிலில் தள்ளிவிட்டு, கல்லூரியை மாணவியை கொன்ற கொலையாளியை கைது செய்தனர். மகள் இறந்த துக்கம் தாங்காமல், அவரின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார். மேலும், கைதான கொலையாளி இரு முறை கல்லூரி மாணவியை கொல்ல முயற்சித்துள்ள திடுக் தகவலும் தெரிய வந்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம். இவர் தனியார் கால் டாக்சி ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி ராமலட்சுமி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக இருந்து வருகிறார். இவரது மகள் சத்யா (20) தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் சதீஷ் (24). இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்த நிலையில் பழகி பின்னர் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், பரங்கிமலை ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் பிற்பகல் சதீஷ்க்கும், சத்யாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த சதீஷ் என்னை காதலிக்கவில்லை என்றால், உன்னை கொன்றுவிடுவேன் என சத்யாவை மிரட்டியுள்ளார். மேலும், அந்த நேரத்தில், தாம்பரத்தில் இருந்து பரங்கிமலை நோக்கி ரயில் வந்தது. அப்போது, சத்யாவை தண்டவாளத்தை நோக்கி சதீஷ் ஓங்கி எட்டி உதைத்துள்ளார்.

இதில் நிலைதடுமாறி தண்டவாளத்தில் சத்யா விழுந்த அடுத்த நொடியில் ரயில் சக்கரத்தில் சிக்கி தலை தூண்டாகி பலியானார். இதை பார்த்த ரயில் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து அலறி கத்தினர். உடனே அங்கிருந்து சதீஷ் தப்பிவிட்டார். தகவல் கிடைத்து, ரயில்வே போலீசார் விரைந்து வந்து, சத்யாவின் உடலை கைப்பற்றி , சதீஷை தேடி வந்தனர்.

சத்யா உடலை பார்த்து கதறி அழுத அவரின் தந்தை மாணிக்கம், அன்று இரவு துக்கம் தாங்காமல் மது அருந்தியுள்ளார். திடீரென அவர் மயங்கி விழவே, அக்கம் பகத்தினர் உடனடியாக, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக , ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அங்கு உயிரிழந்தார். மருத்துவ பரிசோதனையில், அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்தது தெரிந்தது. இதனால், ஆதம்பாக்கம் பகுதியே சோகத்தில் மூழ்கியது.

தப்பிசென்ற சதீஷை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் அவரின் மொபைல்போன் செயலில் இருந்தது. அதன் டவரை வைத்து போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில், துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த சதீஷை அன்று இரவே கைது செய்து, இரும்புலியூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

​இரு முறை முயற்சித்தேன்

அதில் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில், நானும், சத்யாவும் சிறுவயதில் இருந்தே பழகி வந்தோம். சத்யா பிளஸ் டூ படிக்கும் போது, எங்களுக்குள் காதல் வந்தது. நான் படித்துவிட்டு வேலையில்லாமல் ஊதாரி தனமாக, நண்பர்களுடன் சுற்றி திரிந்தேன். கஞ்சா போதைக்கும் அடிமையானேன். இதனால் சத்யா என்னை வெறுத்தார். காதலிக்க மாட்டேன் வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை என கூறினார். தி நகர் ரயில் நிலையத்தில் வைத்து ஒருமுறை சண்டை வந்தது. அப்போதே அவரை கொல்ல முயற்சித்தேன்.

அதன்பிறகு, கல்லூரிக்கு சென்று தகராறில் ஈடுபட்டேன். அப்போதும் கொல்ல முடிவு செய்தேன். இரு முறை முயன்றும் சத்யாவை கொல்ல முடியவில்லை. இறுதியாக, பரங்கிமலையில் ரயில் வரும்போது தள்ளிவிட்டு கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் கூறும்போது; மாணவி சத்யாவை கொடூரமாக கொன்ற சதீஷ் ஒரு சைக்கோ. அவருக்கு கடுமையான தண்டனை பெற்று தருவதற்கு , ரயில்வே போலீசாருக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருப்போம். ஒரே நேரத்தில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளது. அந்த காவலர் குடும்பத்திற்கு, காவல் துறை சார்பில் அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றார்.

நேற்று கொலையாளி சதீஷை சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தியபோது நீதிமன்றம் அவரை 28 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

east tamil

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

Leave a Comment