26.6 C
Jaffna
March 17, 2025
Pagetamil
இலங்கை

தியாகி திலீபனின் 11வது நாள் நினைவு நிகழ்வு!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு ஆண்டின் 11ஆம் நாள் நினைவேந்தல், இன்று யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

நினைவேந்தல் எட்டு மணியளவில் ஆரம்பித்ததுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டு,திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.

தியாக தீபம் திலீபனின் ஞாபகார்த்தமாக அடையாள உண்ணாவிரதம் நடைபெறுவதுடன்,
சித்திரப்போட்டி, மற்றும் இரத்ததானம் என்பனவும் நினைவிடத்திற்கு அருகில் இடம்பெற்று வருகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பட்டலந்த கொடூரம் பற்றி ரணிலின் விளக்கம்

Pagetamil

மழை, மின்னல் எச்சரிக்கை

Pagetamil

மக்கள் பணத்தை எப்படியெல்லாம் ஏப்பமிட்ட ரணில்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Pagetamil

பிள்ளையான்- வியாழேந்திரன் உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி

Pagetamil

சொன்னபடி செயற்பட தவறும் ஜேவிபி: பேராயர் அதிருப்தி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!