27.8 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

வடக்கும்- கிழக்கும் பிரிந்துதான் இருக்கவேண்டும் என்று வெளிப்படையாக கூற முஸ்லிம் தலைவர்கள் தயங்குகிறார்கள்: ஹரீஸ் எம்.பி

வடக்கு கிழக்கை இணைத்து அதில் முஸ்லிம் முதலமைச்சரை நியமிப்போம் என்று கூறும் நிலைக்கு சிலர் முன்வருவார்கள். அது அவர்களது எண்ணம். அது நிரந்தர தீர்வல்ல நிரந்தர தீர்வு இப்போது இருப்பது போன்று வடக்கும் கிழக்கும் தனித்தனியாக இருப்பதே. தலைவர் அஸ்ரப் காலத்தில் இருந்த முஸ்லிங்களின் உறுதியான நிலைப்பாடு போன்று இப்போது இல்லை. வடக்கு வேறாகவும், கிழக்கு வேறாகவும் தனித்தனியாக பிரிந்துதான் இருக்கவேண்டும் என்று வெளிப்படையாக கூற சில முஸ்லிம் தலைவர்களும், அரசியல்வாதிகளும் அதிகமாக தயங்குகிறார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

பாலமுனையில் இடம்பெற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஹரீஸ் எம்.பி அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், வரலாற்றில் எப்போதும் இல்லாதவகையில் ஒரு நல்ல நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் அரகலவின் பின்னர் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மை மக்கள் தொடர்பில் நல்லபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் தமிழ் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டிய தருணமிது. அதற்காக மத்திய அரசியலிலும் அதிகார பரவலாக்க முறையை உருவாக்க வேண்டும். இப்போது அமைச்சர் பதவியென்பது கணக்கில்லா நிலைக்கு வந்துவிட்டது. சமூகத்தின் அதிகாரம் ஓங்க முதல் மூன்று இடங்களுக்குள் ஒன்றில் நாம் அமர வேண்டும். அதுதான் தமிழ்- முஸ்லிம் ஆகிய இரு சமூகத்திலிருந்தும் இரு உப ஜனாதிபதி பதவிகள். இந்த நிலைப்பாட்டை தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்கள் கடந்த 2000 ம் ஆண்டு அரசியலமைப்பு நகலாக பாராளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.

ஜனாஸாக்கள் பற்றியெரிந்த போது அந்த குடும்பங்கள் அடைந்த வலியை எமது அரசியல் பிரமுகர்கள் உள்ளார்ந்தமாக உணர்ந்திருக்கவில்லை. அன்று அதற்கான தீர்வை தரும் அதிகாரம் ஜனாதிபதியாக இருந்த கோத்தாவிடமே அன்று இருந்தது. அரச பக்கமிருந்த ஏ.எல்.எம். அதாஉல்லா, அமைச்சர் அலி சப்ரி ஆகியோர்களின் முயற்சி தோல்வியடைந்த பின்னரே அவர் பேயாக, பிசாசாக இருந்தாலும் கூட தீர்வு அவரிடம் தான் இருப்பதை அறிந்து பேசினோம். சமூகத்தின் ஏச்சுக்களுக்கு பயந்துகொண்டு கோழைத்தனமாக ஒதுங்கியிராமல் துணிந்து எங்களை பலிகொடுத்து அந்த நாட்களை வெற்றிகொண்டோம். கடந்த காலங்களில் சமூக நலனுக்காக நல்ல கருத்துக்களை முன்வைத்த தலைவர் அஸ்ரபுக்கே முட்டை வீசிய சமூகத்திலிருந்து பாராளுமன்றம் சென்ற நாங்கள் பழிச்சொற்கள் வரும், அபாண்டங்கள் வரும், ஏச்சுப்பேச்சுக்கள் வரும் என்பதெல்லாம் தெரியாமல் அரசியல் செய்ய வில்லை. சமூகத்தின் வலியை போக்க அவர்களுடன் சென்று பேசினோம்.

பல வருடங்களின் பின்னர் காலம் எமக்கு சாதகமாக அமைந்திருக்கும் போது விதண்டாவாதம் பேசிக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்பதனால் காலத்தை கவனத்தில் கொண்டு துரிதமாக இயங்க ஆரம்பித்துள்ளோம். விமர்சனங்களுக்கு அஞ்சி கோழைத்தனமாக ஒதுங்க முடியாது. புதிய ஜனாதிபதியாக ரணில் தெரிவானவுடன் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைத்தோம். அதில் முக்கியமாக அமைந்த தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களை பற்றி எடுத்துரைத்தோம், மீனவர்கள், விவசாயிகளின் பிரச்சினைகள், காணி பிரச்சினைகள், நிர்வாக எல்லை பிரச்சினைகளை பற்றி பேசினோம். அதுபோல பல பிரச்சினைகளை பேசியுள்ளோம். நாங்கள் முன்வைத்த பிரச்சினைகளை தீர்த்து கொடுக்குமாறு குறித்த இலாகாக்களுக்கான அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அதில் இப்போது தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் தடைநீக்க நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. மீனவர்கள்- விவசாயிகளின் எரிபொருள் பிரச்சினைக்கான தீர்வு கிட்டவுள்ளது என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கள்ளக்காதலியில் சந்தேகம்; கத்தியால் குத்த முயற்சித்த கள்ளக்காதலன்; தகராறில் 13 வயது சிறுமி பலி

east tamil

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு அரசினால் நிவாரண தொகை

east tamil

“அர்ச்சுனா குழப்பத்தின் பிரதிநி” – சகாதேவன்

east tamil

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

யாத்திரைகளை துன்புறுத்திய 22 பேர் கைது

east tamil

Leave a Comment