2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(28) வெளியான நிலையில், பௌதீக விஞ்ஞானப் பிரிவிலும் உயிர்முறை தொழில்நுட்ப பிரிவிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
பௌதீக விஞ்ஞானப்பிரிவில் ஞானமூர்த்தி சூர்யா என்ற மாணவனும் உயிர்முறை தொழில்நுட்ப பிரிவில் கிருபாகரன் ஹரிகரன் என்ற மாணவனும் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் எட்டு மாணவர்கள் 3ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் மேலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர் என்றும் நீண்ட காலத்துக்கு பின்னர் மாவட்ட மட்டத்தில் முதல்நிலை இடங்களை பெற்றுள்ளமை பாடசாலைக்கு பிரகாசமான காலம் என பாடசாலை அதிபர் எழில்வேந்தன் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1