24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இந்தியா

காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

தனுஷ்கோடியில் கடலில் காற்றாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை (27) பாம்பன் நாட்டுபடகு மீனவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் பகுதியில் கடலில் மிதக்கும் காற்றாலை அமைக்க இந்திய, தமிழ்நாடு அரசுகள் சார்பாக ரூபாய் 350 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் கடலில் மிதக்கும் காற்றாலை அமைத்தால் பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

மேலும் அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியாக உள்ளதால் அறிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் பசுவை, கடல் குதிரை உள்ளிட்டவை அழியும் உயிரிழக்கக்கூடும் என்பதால் கடலில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை கைவிடவும், அந்தத் திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி கடலில் இறங்கி ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி மீனவ தொழிற்சங்கத்தினர் இந்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கண்டனத்தை பதிவு செய்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

Leave a Comment