25.6 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இலங்கை

பிரித்தானிய யுவதியை வெளியேற்ற ரணில் உத்தரவு!

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பிரித்தானிய யுவதி கெய்லி பிரேசரை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய யுவதியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த வாரம் ஜனாதிபதியும் கையொப்பமிட்டுள்ளதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஓகஸ்ட் 2 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற குடிவரவு உத்தியோகத்தர்கள், பிரேசரின் பயண ஆவணங்களை பறிமுதல் செய்ததுடன், விசா நடைமுறைகளை மீறிய விவகாரம் தொடர்பில் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில்7 நாட்களிற்குள் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு தெரிவித்திருந்தனர்.

ஓகஸ்ட் 11 ஆம் திகதி பிரேசர் குடிவரவுத் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்பாக சட்டப்பூர்வமாக இலங்கையை விட்டு வெளியேறுமாறு திணைக்களத்தினால் காலக்கெடு வழங்கப்பட்டது.

இருப்பினும், அவர் குடிவரவுத் திணைக்களத்தின் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். எனினும், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதன்பின்னர்  ஃப்ரேசர் காணாமல் போயுள்ளதாகவும், அவர் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வருவதாகவும், குடிவரவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குடிவரவுத் துறை வட்டாரங்களின்படி, ஃப்ரேசர் மருத்துவ காரணங்களுக்காக 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்திருந்தார். விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், சுதேச மருந்துகளை நாடியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்திய விசாரணைகளில், ஃப்ரேசர் விசாவில் குறிப்பிட்டபடி அத்தகைய மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக பல்வேறு மருந்துகளின் ஊக்குவிப்பு வேலைகளிலும், வயது வந்தோருக்கான உறவு பிரச்சினைகள், போதைப் பழக்கம் போன்றவற்றில் உளவியல் சிகிச்சையாளராக தனது சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்தச் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஒரு இணையதளத்தைப் பயன்படுத்திய அவர், மனநல மருத்துவத்தில் நிபுணராகவும், குணப்படுத்துபவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

விசா நிபந்தனைகளை மீறியதால் இலங்கையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இதுவே காரணம் என்றும், காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக அவர் செயற்பட்டதாலேயே விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுவதுஉண்மைக்குப் புறம்பானது என்றும் குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1948 இலக்கம் 20 இன் 28/2 மற்றும் 28/4 ஆகிய சரத்துக்களின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் ஒரு வெளிநாட்டவரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கும் ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஃப்ரேசரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவுமாறு குடிவரவுத் திணைக்களம் பொதுமக்களையும் பொலிஸாரையும் கோரியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

24வது ஆண்டில் மிருசுவில் படுகொலை

east tamil

யாழ் மாவட்டத்துக்கு வெளியில் கடமையாற்றாத ஆசிரியர்களுக்கு விரைவில் இடமாற்றம்!

Pagetamil

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

east tamil

தனங்கிளப்பில் தாறுமாறாக தறிக்கப்படும் பனைகள்: சாவகச்சேரி பொலிசார் ‘பம்மி’யதன் பின்னணி என்ன?

Pagetamil

பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பற்றிய அறிவிப்பு

Pagetamil

Leave a Comment