25.8 C
Jaffna
December 25, 2024
Pagetamil
இலங்கை

‘பிடித்தோம்… பஸ்ஸில் ஏற்றினோம்… ஆனால் ஆளை காணவில்லை’: ஆர்ப்பாட்டத்தில் கைதான நடிகரை தேடும் பொலிசார்!

அனைத்து பல்கலைக்கழகங்கள் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸ் பிடியிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் நடிகர் ஜெஹான் அப்புஹாமி பற்றிய எந்தத் தகவலையும் நேற்று (21) பிற்பகல் வரை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது தொடர்பாக, நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பணங்களை முன்வைத்ததையடுத்து, ஜெஹான் அப்புஹாமியின் கடவுச்சீட்டிற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனைத்து பல்கலைக்கழகங்கள் மாணவர் ஒன்றியம் கடந்த 18ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜெஹான் அப்புஹாமியை பொலிஸ் குழுவொன்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஉள்ளிட்டவர்களால் அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டனர்.

பின்னர் சந்தேக நபர்களை அழைத்துச் செல்வதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த பேருந்தில் அவர்களை அழைத்துச் செல்வதற்காக மற்ற பொலிசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் பொலிசார் பேருந்தில் சென்று சோதனையிட்டபோது ஜெகன் அப்புஹாமியைகாணவில்லையாம்.

ஜெஹானை ஒப்படைத்த பேருந்துபொலிசாரிடம் கேட்டபோது, ​​ஜெஹான் காவலில் இருந்து தப்பியதாக தெரிவித்தனர்.

அவர் தப்பியோடிவிட்டாரா அல்லது அவர் விடுவிக்கப்பட்டாரா என்பதைக் கண்டறிய, பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸின் ஆலோசனையின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இது தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வினவியபோது, ​​சம்பந்தப்பட்ட பொலிசாரை இதுவரை அடையாளம் காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஜெஹான் அப்புஹாமிக்காக நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, தமது கட்சிக்காரரை பொலிசார் ஒரு போதும் கைது செய்யவில்லை என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் டிப்பர் செலுத்தியவரால் கொடூரம்: கிளிநொச்சியில் 2 வயது சிறுமி பலி!

Pagetamil

ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய அட்டை

Pagetamil

ஒரு கிலோ கோழி இறைச்சி இலஞ்சம் வாங்கியவர்கள் கைது!

Pagetamil

பரந்தனில் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

east tamil

விளம்பரங்களில் சிறுவர்களை பயன்படுத்த தடை

east tamil

Leave a Comment