மாவனெல்ல உதுவன்கந்த மலையில் இருந்து தவறி விழுந்து 27 வயதான பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
பேராதனை பல்கலைகழக விவசாய பீடத்தை சேர்ந்த மாணவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளடங்களாக சுமார் 59 பேர் கொண்ட குழு இன்று உதுவன்கந்த மலையில் ஏறியுளள்னர்.
இதன்போது உதவி விரிவுரையாளர் ஒருவர் குன்றிலிருந்து வழுக்கி, 300 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த வரஸ்மி கொடித்துவக்கு (27) என்பரே உயிரிழந்தார்.
மாவனல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1