வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

Date:

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார்.

கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:

வவுனியா மாவட்டம் – 077 125 0461, கிளிநொச்சி மாவட்டம் – 077 625 7977, யாழ்ப்பாணம் மாவட்டம் – 077 537 4464, முல்லைத்தீவு மாவட்டம் – 077 358 0720, மன்னார் மாவட்டம் – 076 649 9107

பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான சிகிச்சைகளைத் துரிதப்படுத்தவும், இழப்பீடு மற்றும் தரவு சேகரிப்பு நடவடிக்கைகளை இலகுபடுத்தவும் இந்த இலக்கங்களைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

онлайн – Gama Casino Online – обзор 2025.7039

Гама казино онлайн - Gama Casino Online - обзор...

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்