மலைய தொழிலாளர்களிடம் தொழிற்சங்கங்களால் ஒரு தொழிலாளிடம் இருந்து 60 வயது வரை அறவிடப்படும் 9 இலச்சத்து 60 ஆயிரம் ரூபாய் சந்தா பணத்தில் மூன்றில் ஒரு பங்கான 3 இலச்சம் ரூபாவை எதிர்வரும் 2026 ஜனவரி 30 ம் திகதிக்கு முன்னர் தொழிற்சங்கங்கள் வழங்க வேண்டும் இல்லாவிடில் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் தொழிற்சங்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வெய் ஒப் மீடியா ஊடக கற்கை நிலையத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மலையக தொழிலாளர்களை ஒன்றிணைத்து 1931 ம் ஆண்டு சி.டபிள்யு.சி என்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சௌமியமூர்த்தி தொண்டமானால் ஆரம்பிக்கப்பட்டது இந்த மக்களின் இன்ப துன்பங்களுக்கு முகம் கொடுத்து அவர்களை முன்நோக்கி கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டு இந்த தொழில் சங்கம் ஆரோக்கியமாக இருந்து வந்துள்ளது.
ஆனால் தற்போது இந்த தொழில் சங்கம் மக்களிடம் இருந்து சந்தா பணம் என்ற போர்வையில் எந்தளவிற்கு அபகரிக்க முடியும் அந்தளவுக்கு அபகரித்து தங்கள் சுகபோக வாழ்க்கையை செய்து வருகின்றனர்
1939 ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் சந்தா பணம் அறவிடும் போது ஒருவருக்கு ஒரு ரூபாய் 65 சதம் அறவிட்ட தற்போது 332 ரூபா அளவிடுகின்றனர் இது அவர்களின் சம்பள பட்டியலில் இருக்கின்றதுடன் 80 ஆயிரம் அங்கத்தவர்கள் உள்ளனர் எனவே ஒருவரிடம் 332 ரூபா வீதம் 80 ஆயிரம் பேரிடம் பல ஆயிரம் கோடி ரூபா மாதாந்தம் அறவிடப்படடுகின்றது.
ஒரு தொழிலாளி 18 வயது தொடக்கம் 60 வயது வரை 42 வருடம்
9 இலச்சத்து 60 ஆயிரம் ரூபாவை சந்தா பணமாக செலுத்தி வந்துள்ளனர் எனவே இவர்களுக்கு அத்தனை தொழிற்சங்கங்களும் என்ன நன்மைகள் செய்தார்கள் ? எந்த தொழில் சங்கமாவது வெளிப்படையாக தெரிவிக்கவும்.
எனவே தொழிலாளர் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நடந்து கொள்ள வேண்டும் ஆகவே அந்த மலையக மக்களிடம் அறவிடப்பட்ட சந்தா பணத்தில் மூன்றில் ஒரு பங்காக ஒருவருக்கு 3 இலச்சம் ரூபாவை திருப்பி கொடுக்க வேண்டும்
இந்த பணத்தை எதிர்வரும் 2006 ம் ஆண்டு தை மாதம் 30ம் திகதிக்கு முன்னர் கொடுக்க வேண்டும் அல்லாவிடில் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் இது அடிப்படை மனித உரிமை மீறல்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சட்டவிரோதமான சொத்து குவிப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தால் கைகட்டி நிற்க வேண்டி வரும் ஆகவே தயவு செய்து தொழில் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக நாங்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்னர் ஒவ்வொரு தொழிலாளரிடம் இருந்து அறவிடப்பட்ட சந்தா பணத்தில் 3 இலச்சம் ரூபாவை கொடுக்க வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.
ஆகவே மலையக மக்கள் இது உங்களுடைய சந்தா பணம் உங்கள் சந்தா பணத்தை சூறையாடி வரும் தொண்டமானை நீங்கள் வாழ வைக்க வேண்டாம் உங்களுடைய சந்தா பணத்தை ஒவ்வொரு தொழிற்சங்கங்களிடம் சென்று கேளுங்கள் தராவிட்டால் என்னுடன் தொடர்பு கொள்ளவும்
இன்று இந்தியா சென்னையில் மீடியா சினிமா வர்த்தகம் கொழும்பு 7 இல் 3 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்து மற்றும் நுவரெலியா நகர், ஹட்டன், பொகவந்தலாவ, நாவலப்பிட்டி, தலவாக்கலை உட்பட பல ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை வைத்து கொண்டு இன்று இலங்கையில் 7வது பணக்காரர்களா இருக்கின்றனர். இந்த சந்தா பணத்தில் சேர்க்கபட்ட சொத்துக்கள் தான் இவை என்பதுடன் உங்கள் சொத்து தொடர்பான ஆவணம் என்னிடம் இருக்கிறது
இது அப்பாவி மக்களின் பணம் உங்களுக்கு கண் காது இல்லையா இன்று அந்த மக்கள் வீதியில் எனவே அவர்களிடம் அறவிட்ட பணத்தை திருப்பி கொடுக்கவும்
இல்லாவிடில் சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பாக வழக்கு தாக்கல் செய்வோம் எனவே மலையக மக்கள் திகாம்பரம், இராதாகிருஷ்ணன், வடிவேல் சுரேஷ். உட்பட உள்ள தொழிற்சங்கங்களிடம் உங்கள் பணத்தை கேட்கவும் அதேவேளை தோட்ட கம்பனிகளின் ஆளுமைக்குள் இருக்கும் தோட்ட லயன் களில் உள்ள மக்களை கவனிக்காமல் இருக்கிறீர்கள் உங்களுக்கு எதிராகவும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வோம் நீதிமன்றம் செல்வோம்.
ஒரு கிராமமே இல்லை காலையில் இரண்டு ரொட்டியுடன் ஒழுங்கான சீருடை இல்லாமல் மழை பணி வெயிலில் காலுக்கு கூட ஒழுங்கான சப்பாத்து இல்லாமல் அட்டைகடிக்குள் சென்று இரத்தத்தை தாரைவார்த்துக் கொடுத்து 18 கிலோ கொழுந்து பறித்து சந்தா பணத்தை செலுத்தும் அந்த மக்கள் உங்களுக்கு கொஞ்சம் கூட உணர்வே இல்லையா? என்றார்.
-கனகராசா சரவணன்-



