இலங்கையை புரட்டிப்போட்ட இயற்கை பேரனர்த்தத்தினால் மொத்தம் 607 பேர் இறந்துள்ளதாகவும், 214 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 16 ஆம் திகதி தொடங்கிய தொடர்ச்சியான பாதகமான நிலைமைகள், நாடு முழுவதும் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த 2,082,195 நபர்களை இதுவரை பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், 4,164 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், 67,505 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



