மட்டக்களப்பு கிரான் பகுதியில் வீதி நிர்மாணிப்பதற்காக வீதி ஓரத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் பொறிக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான கிறவல் மண் உல்லாச விடுதி ஒன்றினைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் பிக்கப் ரக வாகனம் ஒன்றில் திருடி கொண்ட சென்றவர்களுக்கு எதிராக சமூக செயற்பாட்டாளர் விமலசேன லவக்குமார்; நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது
கிரான் கும்புறுமூலை சந்தியில் இருந்து கடற்கரை வரையான மரமுந்திரிகை தோட்ட வீதியை வீதி அபிவிருத்தி திணைக்களம் காப்பற் வீதி நிர்மானித்து வருகின்றனர். .
இந்த வீதி நிர்மாணிப்பின் போது வீதியின் இரு பகுதிகளையும் பாதுகாப்பதற்காக கிறவல் மண் போடப்பட்டு செப்பனிடுவதற்கு கிறவல் கொண்டுவரப்பட்டு வீதியின் கரையில் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குவிக்கப்பட்ட கிறவல்களை சம்பவ தினமான இன்று பகல் ;அந்த பகுதியில் உள்ள உல்லாச விடுதி ஒன்றைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் பிக்கப் ரக வாகனம் ஒன்றில் சென்று அங்கு செப்பனிடுவதற்கு குவிக்கப்பட்டிருந்த கிறவல்களை திருடி தமது வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
அந்த பகுதியில் சென்ற சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் இதனை அவதானித்து இது அரச சொத்து இதனை திருடுவது சட்டவிரோதம் என தெரிவித்துக் கொண்டார் அதனை பொருட்படுத்தாது அவர்கள் கிறவலை திருடி தமது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து ஒரு சமூக செயற்பாட்டாளரும் பொது மகன் என்ற அடிப்படையில் அரச சொத்தை திருடிச் சென்றவர்களுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-கனகராசா சரவணன்-



