டித்வா புயலை தொடர்ந்து முழு இலங்கையிலும் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க, இந்தியா முழுமையான உதவியை வழங்க வேண்டுமென கோரி, தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை முன்வைக்க திட்டமிட்டுள்ளன.
இதற்கான கலந்துரையாடல் இன்று (டிச.3) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ் கட்சிகள் கூட்டாக இந்திய அரசிடம் கோரிக்கை விடுவதென கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, இது பற்றி கலந்துரையாடல் நடத்தி, கடிதத்தை இறுதி செய்ய இன்று காலையில் யாழ்ப்பாணத்தில் கூடுகிறார்கள்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த யோசனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ், முத்திரைச்சந்தியிலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.



