கிளிநொச்சி கிராம அலுவலர்கள் ஒரு வாரத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து பணிக்குச் செல்ல தீர்மானம்

Date:

உமையாள்புரம் கிராம உத்தியோகத்தர் தியாகராசா கலைரூபன் அவர்கள் கடந்த
29.11.2025ம் திகதி சனிக்கிழமை கிளி/பரந்தன் இந்து மகாவித்தியாலய
நலன்புரி நிலையத்தில் மாலை 06.10 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர்
கருணநாநன் இளங்குமரன் என்பவரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தங்களது
எதிர்ப்பினை தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட கிராம அலுவலர்கள் ஒரு
வாரத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து தங்களது கடமைகளை மேற்கொள்ள
தீ்மானித்துள்ளனர்.

ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்க கிளிநொச்சி மாவட்ட கிளையினரின்
கூட்டத்தில் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை மற்றும் பொதுமக்களுக்கான மனித நேய
பணிகளை வழங்க வேண்டியதன் அவசியம் காரணமாக
நாளை தொடக்கம் ஒருவாரத்திற்கு கறுப்பு பட்டி அணிந்து பணிக்கு
செல்வதாகவும் நியாயமான சட்டரீதியான தீர்வுகள் கிடைக்காதவிடத்து மேலதிக
செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தீர்மானிக்கவும் பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்