நிலவும் அவசரகால அனர்த்த சூழ்நிலை காரணமாக வழக்கமான அலுவலக நடவடிக்கைகளை பராமரிப்பதில் ஏற்படும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் 28.11.2025 வெள்ளிக்கிழமையை அதாவது நாளை அரச அலுவலகங்களுக்கு விசேட விடுமுறையாக அறிவித்துள்ளது என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
மேலும், இந்த விடுமுறை அத்தியாவசிய அரச சேவைகள் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் தொடர்பான அதிகாரிகளை அழைப்பதற்கு தடையாக இருக்கக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



