புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டார்

Date:

கத்தோலிக்கச் சமூகத்தினரின் புதிய பாப்பரசராக அமெரிக்காவைச் சேர்ந்த பேராயர் ரொபேர்ட் பிரான்சிஸ் பிரவொஸ்ட் (Robert Francis Prevost) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

போப் லியோ (Leo) என்று அழைக்கப்படும் அவருக்கு வயது 69.

கத்தோலிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் பாப்பரசராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Sistine Chapel தேவாலயத்தின் புகைப்போக்கிலிருந்து வெண்புகை தென்பட்ட சுமார் 70 நிமிடங்கள் கழித்து St. Peter’s Basilica தேவாலயத்தின் மாடி முகப்பில் போப் லியோ தோற்றமளித்தார்.

அவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் பேராயர் பதவியில் உள்ள 133 பாதிரியார்கள் கலந்துகொண்டனர்.

இத்தாலி மொழியில் உரையாற்றிய புதிய பாப்பரசர், அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும் என்று வாழ்த்தினார்.

அவர் தமது பணியின் பெரும்பாலான பகுதியைப் பெருவில் கடந்தார்.

2023 ஆம் ஆண்டில்தான் அவர் பேராயர் பதவியை ஏற்றார்.

இதுவரை அவர் ஆகக் குறைவான ஊடக நேர்காணல்களில் கலந்து கொண்டுள்ளார் என்றும் மிக அரிதாகப் பொதுவெளியில் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்