முல்லைத்தீவின் விசுவமடு பகுதியில் பாடசாலையின் பெயரை பயன்படுத்தி இயங்கி வரும் விஸ்வநாதர் நிதியத்தை உடனடியாக தடை செய்யுமாறு முல்லைத்தீவு வலய கல்வி பணிப்பாளருக்கு மாகாண கல்வி பணிப்பாளரால் இரண்டாவது நினைவூட்டல்
கடிதம் மூலம் உத்தரவு பிறபிக்கப்பட்டும் முல்லைத்தீவு வலயக் கல்வித்
திணை்க்களம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கல்விச் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த நிதியம் தொடர்பில் மாகாண கல்வித் திணைக்களத்திற்க பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அது தொடர்பிலேயே மாகாண கல்வித் திணைக்களம் குறித்த நிதியத்தை தடைசெய்யுமாறு முல்லைத்தீவு வலயக் கல்வித் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவிப்பு விடுத்திருந்தது
இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கல்விச் சமூகம் கவலை தெரிவித்துள்ளது. அத்தோடு குறித்த நிதியத்தின் நடவடிக்கைகளை
உடனடியாக தடை செய்து சட்ட ரீதியான செயற்பாடுகளுக்கு வலயக்
கல்வித்திணைக்களம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோகரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.



