போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய,
500 மில்லி லீற்றர் – 70 ரூபாய்
1 லீற்றர் – 100 ரூபாய்
1.5 லீற்றர் – 130 ரூபாய்
2 லீற்றர் – 160 ரூபாய்
5 லீற்றர் – 350 ரூபாய்
என அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல், எந்தவொரு உற்பத்தியாளரோ, பொதி செய்பவரோ, வர்த்தகரோ அல்லது விநியோகஸ்தரோ நாட்டில் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது விற்பனைக்கு காட்சிப்படுத்தவோ கூடாது என்று வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.