நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தகத்திற்காக கொண்டுவரப்ட்ட ஒரு தொகுதி மதுபானம் ஏற்றிய உழவு இயந்திரம் இன்றையதினம் (ஏப்ரல்03) பொலிஸாரால் பிடிக்கப்பட்டுள்ளது.
குறிகாட்டுவானில் இதற்கான அனுமதி பெற்ற படகில் நெடுந்தீவுக்கு கொண்டுவரப்பட்ட போதும் நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து உரிய விருந்தகத்திற்கு அனுமதி மற்றும் இலக்கத்தகடு இல்லாத உழவு இயந்திரத்தில் மதுபானம் ஏற்றப்பட்டவேளையில் பொலிஸாரால் வாகனத்துடன் மதுபானம் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
துறைமுகப் பகுதியில் மதுபானம் இறக்கப்பட்ட நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்காக நெடுந்தீவில் நின்ற யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் இதனை நேரடியாக அவதானித்து சம்பவ இடத்தில் பிரசன்னமாகி நிலைமையினை ஆராய்ந்த பின்னர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.
அண்மையில் சாவகச்சேரியில் அனுமதி பெற்று கல் ஏற்றிச்சென்ற வாகனத்தையும் க.இளங்குமரன் வழிமறித்து படம் காட்டி, மூக்குடைபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.