மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 15 முதல் TIN வழங்க வேண்டிய அவசியம் அமல்படுத்தப்படும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையளாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவித்தார்.
அதன்படி, மோட்டார் போக்குவரத்து திணைக்கள சேவைகளை அணுகும்போது தனிநபர்கள் அந்தந்த கவுண்டர்களில் தங்கள் TIN ஐ சமர்ப்பிக்க வேண்டும்.