27.2 C
Jaffna
April 5, 2025
Pagetamil
இலங்கை

‘அம்மா என்னை மன்னித்து விடுங்கள்’: யூடியூப்பர் எடுத்த விபரீத முடிவு!

கொழும்பு, காலிமுகத்திடலில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் 31வது மாடியில் உள்ள அறையில் இருந்து விழுந்து இறந்த இளைஞன் குறித்து தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மரணம் தற்கொலைதான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கண்டி, குண்டசாலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த இளைஞனின் பணப்பையில், “மன்னிக்கவும், அம்மா, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன், நான் எப்போதும் உங்களைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்று எழுதப்பட்ட ஒரு குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த இளைஞன் 30ஆம் திகதி இரவு ஹோட்டலுக்கு வந்து 31வது மாடியில் ஒரு அறையை முன்பதிவு செய்தார்.

ஹோட்டல் ஊழியர் ஒருவர், ஹோட்டலின் நான்காவது மாடியில் உள்ள தோட்டப் பகுதிக்கு அருகில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்த நிலையில் காணப்படுவதாக அளித்த புகாரைத் தொடர்ந்து, சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இறந்த இளைஞனின் யூடியூப் சனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

ஹர்ஷ இலுக்பிட்டியவின் பிணை மனு நிராகரிப்பு

Pagetamil

பூசா சிறையில் கைதி கொலை

Pagetamil

போத்தல் குடிநீருக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

Pagetamil

15 வயது மாணவி கூட்டாக சீரழிப்பு: 7 பேர் கைது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல்: நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!