யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார்.
ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார்.
சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.
வயோதிபர் ஒருவர் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் திடீரென வீதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்டுள்ளார். பின்னால் அதிவேகமாக சென்ற இளைஞன், வயோதிபரை மோதுவதை தவிர்க்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து வீதியோர வாய்க்கால் கட்டில் மோதினார்.
தலையில் பலத்த காயமடைந்த இளைஞன், அதிக இரத்தப் போக்கினால் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.