Pagetamil
இலங்கை

பிக்குவின் பிறப்புறுப்பு அறுத்துக் கொலை: சந்தேகநபர் கைது!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு மடத்தில் வசித்து வந்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கட்டுநாயக்க பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்த பிக்குவின் தொலைபேசித் தரவை பகுப்பாய்வு செய்த போது கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் அனுராதபுரம், எப்பாவல, கிரலோகம பிரதேசத்தில் உள்ள மடம் வசித்து வந்த பிக்கு ஒருவர் அந்த விகாரையில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலை செய்யப்பட்ட நபர் கிரலோகமவில் உள்ள ருக்சேவன மடத்தின் பீடாதிபதியாகப் பணியாற்றிய 69 வயதான விலச்சியே பிரேமரத்ன தேரர் ஆவார். அவர் கிராமத்திலிருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் மடத்தை உருவாக்கியுள்ளார்.

அவரது உடலின் பல பகுதிகளில் கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. முகம், கையில் வெட்டுக்காயம் காணப்பட்டதுடன், பிறப்புறுப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, எப்பாவல வைத்தியசாலைக்கு அருகிலுள்ள தனியார் காணியொன்றில், கைவிடப்பட்ட நிலையில் பிக்குவுக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

பின்னர், அனுராதபுரம் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் திலின ஹேவாபதிரனவின் அறிவுறுத்தலின் பேரில், எப்பாவல பொலிஸாரால் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்படி, பிக்குவின் தொலைபேசி தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், சந்தேகநபர் கட்டுநாயக்க பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.

பின்னர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பொலிஸ் விசாரணையின் போது, ​​கொலை செய்யப்பட்ட பிக்குவுடன் ஏற்பட்ட மிகவும் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக தான் கொலையைச் செய்தவிட்டு, தப்பிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள்

மோட்டார் போக்குவரத்து திணைக்கள சேவையை பெற வரி செலுத்துவோர் அடையாள எண் அவசியம்!

Pagetamil

யாழ் பல்கலைக்கழக மாணவன் மீது பகிடிவதை: மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம்!

Pagetamil

‘அம்மா என்னை மன்னித்து விடுங்கள்’: யூடியூப்பர் எடுத்த விபரீத முடிவு!

Pagetamil

பெண் சட்டத்தரணியை விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

Pagetamil

நாளை பாடசாலைகள் மீள ஆரம்பம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!