Pagetamil
இலங்கை

அப்பக்கோப்பை!

இலங்கையின் வலுசக்தி அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் தகவலை வெளிபடுத்திய ஊடகவியலாளர் மீது நான் அப்பக்கோப்பை அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சூடாகிய சம்பவம் இன்று மாலை பதிவானது .

இது குறித்து மேலும் தெரியவருவதாவது-

யாழ் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கை புத்திஜீவிகள் அமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது .இதன் பொழுது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், வலு சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ,டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் கொடி துவக்கு , பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் யாழ் மாவட்ட பொறியியலாளர்கள் , பொறியியல் துறைசார் வல்லுனர்கள், பேராசிரியர்கள் , கல்வியலாளார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் உரையாற்றிய வலு சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தங்கு தடையின்றி 24 மணிநேர மின்சாரத்தை வழங்குவது எமது நோக்கமாக உள்ளது என தெரிவித்தார்.

அவர் உரையாற்றி சில நிமிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பில் தகவலை சமூக ஊடகத்தில் ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விரைந்து வந்த இளங்குமரன் எம்பி நான் அப்பக் கோப்பை அல்ல, அனைவரும் இணைந்து மின் ஆழியை நிறுத்தினால் மின்சாரம் இல்லாது போகும் என தெரிவித்து சென்றார்.

இதனிடையே ஊடகவியலாளர்கள் மின்சார துண்டிப்பு தொடர்பில் மின்சார சபையுடன் தொடர்பு கொண்டே செய்தியினை உறுதிபடுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் திடீரென ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விரைந்த இளங்குமரன் எம்பி, மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் தெரியாது பேசிவிட்டேன் எனவும் கூறினார்.

இதையும் படியுங்கள்

பணம் வாங்கிவிட்டு அர்ச்சுனாவால் ஏமாற்றப்பட்ட பெண்: வசூல்ராஜாவின் மோசடிகளை அம்பலப்படுத்துகிறார்!

Pagetamil

தென்னக்கோனை நீக்குவதற்கான விசாரணைக்குழு அறிவிப்பு வரைவில் பாராளுமன்றத்தில்!

Pagetamil

யாழில் குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய அலுவலகம்!

Pagetamil

போர்க்குற்றவாளிகள் மீதான தடையை ஆராய குழு!

Pagetamil

மஹிந்தவின் கூட்டாளிக்கு 16 வருட சிறை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!