யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் இக் கூட்டம் ஆரம்பமாகியது.
இதன் போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பொது மக்களின் பிரச்சனைகள் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பிரதேச செயலர்கள், அரச திணைக்களத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1