கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மாற்றத்துக்கு வாக்களிக்கப் போகிறோம் என்ற அலையில் சிக்கியதால், நிகழ்ந்த விபரீதத்தை யாழ்ப்பாண மக்கள் தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர்.
அதன் இன்னொரு அங்கமாக, இன்றைய யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுக்கும் பலனில்லாத விதத்தில் தர்க்கப்பட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து உளறி வரும் அர்ச்சுனா இராமநாதனும், அவருக்கு போட்டியாக உருவாக எத்தனிக்கும் க.இளங்குமரனும் இன்று மதவடியில் இளைஞர்கள் தர்க்கப்படுவதை போல தர்க்கப்பட்டனர்.
படிக்கிற காலத்தில் பெண்களிடம் அடிவாங்கியவர் நீங்கள் என அர்ச்சுனாவை நோக்கி குறிப்பிட்டார் இளங்குமரன்.
விபத்தின் பின்னர் மாறி கதைக்கிறார் இளங்குமரன் என அர்ச்சுனா சொன்னார்.
அதை தொடர்ந்து இருவரும் மாறிமாறி சிறுபிள்ளைத்தனமாக தர்க்கப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1