தனது காதலனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, சுவர் இடிந்து விழுந்ததில் காதலி உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் வாதுவ மொரோந்துடுவ பகுதியைச் சேர்ந்த பிரசாதினி பிரியங்கிகா என்ற 23 வயதுடைய பெண் ஆவார். இறந்த பெண்ணின் காதலன் பாதுகாப்புப் படையில் பணிபுரிகிறார். அவர் விடுமுறையில் இருந்தபோது தனது பாட்டி அவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறி அழைத்ததை அடுத்து, காதலி அந்த வீட்டிற்குச் சென்றிருந்தாள்.
வீட்டின் பின்புறம் ஆடுகளை மேய்க்க இளைஞன் சென்றிருந்தபோது, இளம் பெண் வீட்டின் பின்புறம் உள்ள சுவரின் அருகே நின்று கொண்டிருந்தபோது, சுவர் அவரது உடலில் சரிந்து விழுந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.