உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளன.
வரும் செவ்வாய்க்கிழமை காலையில் வழக்கு தாக்கல் செய்யப்படுமென இரண்டு கட்சி வட்டாரங்களும் தெரிவித்தன.
தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணமும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் நிசாம் காரியப்பரும் முன்னிலையாகவுள்ளனர்.