விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது சேவை இடைநிறுத்தப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கழித்த முதல் நாளில் சாப்பிடக்கூட மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், யாருடனும் பேசவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தேசபந்து தென்னகோனின் பிரதிவாதி சட்டத்தரணிகள் முன்வைத்த பிணை கோரிக்கையை நிராகரித்த மாத்தறை நீதவான் அருண புத்ததாச, சந்தேகநபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும், சந்தேக நபரை சிறைச்சாலையில் தனியான பாதுகாப்பான இடத்தில் பலத்த பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்குமாறும் நீதவான் சிறைச்சாலைக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக நபரான ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனை சிறைச்சாலை பேருந்தில் தும்பர சிறைச்சாலை அறைக்கு அழைத்துச் சென்றனர்.