25.9 C
Jaffna
March 30, 2025
Pagetamil
இலங்கை

வேட்புமனுக்கள் நிராகரிப்பின் பின்னணியில் சதி?

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்கள் அதிகளவில் நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் சதி காரணமாக இருக்கலாமென ஐனநாயக தமிழ் தேசிய கூட்டசியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் தெரிவித்தார்.

யாழிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத் தாக்கலில் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டசியின் வேட்பு மனுக்கள் பல நிராகரிக்கப்பட்ட நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை பொறுத்த வரையில் இரண்டு சபைகளை தவிர ஏனைய சபைகளிற்கு நாங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தோம். இதில் எங்களுடைய பல சபைகள் நிராகரிக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள்.

இவ்வாறு நாங்கள் மாத்திரமல்லாமல் பல கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் ஒரே காரணத்துற்காக நிராகரிக்கப்பட்டதாக சொல்லுகிறார்கள்.

ஆனால் நிராகரிக்கப்பட்டதற்காக எமக்கு கூறப்படுகின்ற காரண ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனெனில் தேவையான அனைத்தையும் நாம் வழங்கி இருக்கிறோம்.

ஆகையினால் ஏதேனும் காரணங்களுக்காக எமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எம்க்கு ஏற்பட்டுள்ளது. எனவே தான் இதற்கு எதிராக நாம் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் நீதிமன்றம் செல்வோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆனையிறவு உப்பளம் மீள ஆரம்பம்: ஆனால் பெயர் வேறு!

Pagetamil

நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்குபற்றாமல் நடைபெற்ற உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Pagetamil

விரைவில் ஆனையிறவு உப்பு!

Pagetamil

அப்பக்கோப்பை!

Pagetamil

வதை முகாம்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும்; வவுனியாவில் அமைச்சர் பிமல்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!