Pagetamil
இலங்கை

விரும்புகிறோம்… ஆனால் நடக்காது!

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம். ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து ஒரு சிலரோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்

இப்படியாகத்தான் பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒன்பது கட்சி கூட்டு பத்து கட்சிக் கூட்டன பல செய்திகள் கூட்டுகள் வந்தன. தப்பி தவறி ஒருவர் மட்டும் பாராளுமன்ற உறுப்பினராக வந்தார். எந்தவித தாக்கத்தையும் இந்த கூட்டு செலுத்தாது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறோம். மிகுதி 12 சபைகளுக்கான வேட்புமனுக்களை நாளை காலை சமர்ப்பிப்போம்.

நிறைந்த போட்டியின் மத்தியிலே வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதனால் சற்று நேரம் தாமதித்து தான் இறுதி செய்து கொண்டிருக்கிறோம்.

கட்சியினுடைய தீர்மானத்தின் படி எந்த ஒரு சபைக்கும் முதல்வரோ தவிசாளரோ அறிவிக்கப்படப் போவதில்லை. தேர்தலுக்கு பிறகு தான் அது சம்பந்தமாக கட்சி முடிவு எடுக்கும்.

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லாருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம். ஆனாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம். அப்படியாக அல்லது பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் அந்தந்த சபைகளையும் சபைகளில் வேறு யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பதை பொறுத்து நாங்கள் தீர்மானிப்போம் – என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாதகல் கடலில் இளைஞன் பலி

Pagetamil

பியூமியை பணமோசடி தடுப்பு சட்டத்தில் விசாரிக்க உத்தரவு!

Pagetamil

வெலிகம துப்பாக்கிச்சூடு: 6 சந்தேகநபர்களுக்கு பிணை!

Pagetamil

நில மோசடி விவகாரத்தில் மஹிந்த மனைவியும் விசாரணை வளையத்தில்

Pagetamil

சாப்பிட மறுத்த தென்னக்கோன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!