Pagetamil
இலங்கை

யாழில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகனுக்கு விளக்கமறியல்!

குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன் , பொலிஸ்நிலையங்களுடன் வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை தொடர்பில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில், பொலிஸ் அதிகாரியின் மகன் தலைமறைவாகி இருந்தார்.

அது குறித்து, யாழ் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்த நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துமாறு மன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தது.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரியின் மகன் இன்றைய தினம் திங்கட்கிழமை சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையானதை அடுத்து, அவரை எதிர் வரும் 28ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

அதேவேளை சந்தேக நபரின் தந்தையான பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்காவில் ஆபாசப்படங்களில் நடிக்கும் இலங்கை இளைஞன்!

Pagetamil

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல்!

Pagetamil

தென்னக்கோனின் வீட்டில் 1,000 மதுபானப் போத்தல்கள்!

Pagetamil

யாழில் தமிழ் காங்கிரஸ் கட்டுப்பணம் செலுத்தியது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் ஜேர்மன் பெண்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!