2023 ஆம் ஆண்டு வெலிகம காவல் பிரிவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட 6 சந்தேக நபர்களை கைது செய்ய வேண்டாம் என்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
கொழும்பு குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஆறு சந்தேக நபர்களும், தங்களை கைது செய்யக்கூடாது என்று கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதன்படி, சட்டமா அதிபருக்கும் மனுதாரர்களின் சட்டத்தரணிகளுக்கும் இடையே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணைகள் முடியும் வரை அவர்களைக் கைது செய்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் துறையின் ஆறு புலனாய்வுக் குழுக்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது.