பொலன்னறுவை மருத்துவமனையின் இயக்குநர் டொக்டர் எச்.எம்.ஐ.யு. கருணாரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை மருத்துவமனையில் தற்போது பணியாற்றி வரும் பணிகளுக்கு மேலதிகமாக, இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பதில் இயக்குநர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நியமனம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1