யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Date:

வித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை , சிகை அலங்காரங்களை சீர் செய்து வருமாறு அதிபர் திருப்பி அனுப்பியுள்ளார்.

யாழ். நகருக்கு அண்மையில் உள்ள பிரபல பாடசாலையில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள், இதுவரை காலமும் கல்வி விடுமுறையில் நின்று , பாடசாலைக்கு இன்றைய தினம் பரீட்சை அனுமதி பெற வித விதமான சிகை அலங்கரிப்புடன் ( முடி வெட்டல்) சென்றுள்ளனர்.

அதில் சில மாணவர்கள் தமது பெற்றோருடன் அனுமதி அட்டைகளை பெற சென்றுள்ளனர். அவ்வாறு வித்தியசமான சிகை அலங்கரிப்புடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை சிகை அகலங்கரிப்பை சீர் செய்து வருமாறு பாடசாலை அதிபர் திருப்பி அனுப்பியுள்ளார்.

உடனேயே பாடசாலைக்கு அருகில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு சென்ற மாணவர்கள் சிகை அலங்கரிப்பை சீர் செய்து பாடசாலை திரும்பினார்.

மாணவர்கள் தமக்குரிய ஒழுக்க விழுமியங்களுடன் நடக்க வேண்டும் எனவும் , பாடசாலை காலம் முடியும் வரை பாடசாலைக்கான ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என மாணவர்களை எச்சரித்ததுடன் , பெற்றோர்களுக்கும் , பிள்ளைகளுடைய நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் சிகை அலங்கரிப்பு தொடர்பில் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் , இது தொடர்பில் சிகை அலங்கரிப்பாளர்கள் சங்கம் தமது அங்கத்தவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கடந்த காலங்களில் கோரி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்