புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர், அவருக்கு இடமளிக்கும் வகையில் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளும் அவரை பாராளுமன்றத்திற்கு வருமாறு முன்மொழிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்தில் காலி பகுதிக்கு விஜயம் செய்தபோது, பொதுமக்கள் அவரிடம் பாராளுமன்றத்திற்கு வந்து பொது சேவையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்குப் பதிலளித்த ரணில், “கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” எனக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.