ரயிலில் இருந்து தவறி விழுந்து ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கி பயணித்த பொடிமனிக்கே ரயிலிலிருந்து இன்று (19) காலை தவறி விழுந்து ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலி எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரயில் சுரங்க பாதையை கடந்து, அமுனுவெல்பிட்டிய பகுதியில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது, குறித்த பெண் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சடலம், பயணித்த அதே ரயிலில் ஹாலி எல ரயில் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கிருந்து பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அனுதாபகரமான சம்பவம் தொடர்பாக ஹாலி எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.