தனது முன்னாள் காதலனை பழிவாங்க வித்தியாசமான முறையில் திட்டம் வகுத்து அதை செயற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின், காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு இளம்பெண் தனது முன்னாள் காதலனை வித்தியாசமான முறையில் பழிவாங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
காதல் முறிவால் ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, குருகிராமைச் சேந்த இளம்பெண் தனது முன்னாள் காதலனுக்கு எதிராக ஒரு சிக்கலான திட்டத்தை வகுத்துள்ளதாக ஊடகங்கள் விபரிக்கின்றன.
காதலர் தினத்தில் (14.02.2025) அவர் ஒன்லைன் மூலம் 100 பீட்சாக்களை ஒரே நேரத்தில் ஓர்டர் செய்துவிட்டு, டெலிவரிக்கான முகவரியாக முன்னாள் காதலனின் வீட்டு விலாசத்தை வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, பீட்சா பணத்திற்காக ‘Cash on Delivery’ முறையை தேர்வு செய்ததால், உணவு விநியோக ஊழியர்கள் அந்த 100 பீட்சாக்களையும் முன்னாள் காதலனின் வீட்டிற்கே கொண்டு சென்றனர்.
அச்சமயம், உணவு விநியோக ஊழியர்கள் வீட்டை அடைந்ததும், முன்னாள் காதலன் அங்கு தான் எதையும் ஓர்டர் செய்யவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அந்த விநியோக ஊழியர்கள் திடுக்கிட்ட நிலையில் பதற்றமடைந்தனர்.
இந்த சம்பவம் இணையத்தில் வேகமாக பரவிவரவே, பலர் இதற்கான வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் காதல் முறிவில் ஏற்பட்ட கோபத்தைக் காட்டும் விதமாகவும், சமூக வலைதளங்களில் பலருக்கும் ஆச்சரியத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தும் நிகழ்வாகவும் மாறியுள்ள பேசு பொருளாக வலம்வருகின்றமை குறிப்பிடத்தக்கது.