வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபனை இந்தியாவின் கியூ பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
போலியான முகவரி கொடுத்து பாஸ்போர்ட் எடுத்த குற்றச்சாட்டில் திலீபனை கியூ பிரிவு பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
2019ம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போலி முகவரியைக் கொடுத்து மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்ற வழக்கில், முன்னாள் எம்.பி. திலீபன் மீது இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 11ஆம் திகதி கொச்சி விமான நிலையம் வந்த திலீபனை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து, மதுரை க்யூ பிரிவு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
2020 நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக திலீபன் தெரிவாகியிருந்தார். இம்முறை தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து விலகியிருந்தார். பின்னர், நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் விடுதலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.