மத்திய அமெரிக்காவில் உள்ள குவாடமாலா நாட்டின் எல் ரான்ச்சோ கிராமத்திலிருந்து 75 பயணிகளுடன் புறப்பட்ட பஸ் , சான்அகஸ்டின் அகாசகுவாஸ்லான் பகுதியில் செல்லும் போது, பெலிஸ் பாலம் அருகே பஸ் கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்ற கார் மீது மோதி 20 அடி ஆழத்தில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர், மேலும் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் தீயணைப்புத் துறையினர், ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என ஊடகங்கள் தகவல் பகிர்கின்றன.
சம்பவத்தை அடுத்து, குவாடமாலாவின் அதிபர் பெர்னார்டோ அரேவலோ மிகவும் அதிர்ச்சியையும் கவலையும் தெரிவித்தார்.
இச் துயர் சம்பவம் குறித்து, தனது அறிவிப்பில், 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதை தெரிவித்தார். மேலும், “இதயத்தை உடைக்கும் செய்திகளைக் கேட்டு விழித்தெழுந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களின் வலி எனது வலி,” என்று அவர் கூறியுள்ளார்.
இதன் மேலும், குவாடமாலா நகரில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த நிலையில், பலர் பஸ்ஸில் சிக்கிக் கொண்டுள்ளதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எனினும், எஞ்சியவர்களின் நிலை என்ன என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்து உள்ளூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



