பண்டாரகம – முச்சக்கர வண்டியொன்றில் பத்து ஆடுகளை கடத்திச் சென்ற இரண்டு நபர்களை பண்டாரகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பத்து ஆடுகளில் ஒன்று இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீல நிற முச்சக்கர வண்டியில் ஆடுகள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக பண்டாரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், வீடகம பகுதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி உடனடியாக நிறுத்தப்பட்டு, அதிலிருந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, வாகனத்தில் பத்து ஆடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அந்த ஆடுகள் முச்சக்கர வண்டியின் பின்புறத்தில், ஒன்றின் மேல் ஒன்று இறுக்கப்பட்ட நிலையில் இருந்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த திடீர் சோதனை காரணமாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.



