பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் அவரது T56 துப்பாக்கியுடன் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
துப்பாக்கியுடன் கான்ஸ்டபிள் காணாமல் போனது தொடர்பாக புதிய தகவல்கள் வந்துள்ளன. பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததன்படி, குறித்த கான்ஸ்டபிள் துபாய்க்கு தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரிகள் விரைவில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்தைத் துரிதமாக தீர்மானிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.