வஸ்கடுவ – கபுஹேன பகுதியில் மரக்கட்டைகள் வீழ்ந்ததில் ஒருவர் பலியாகிய சம்பவம் பதிவாகியுள்ளது.
லொறியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மரக்கட்டைகள் தவறி விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் அப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, உயிரிழந்தவர் எகொட உயன பகுதியை சேர்ந்த 48 வயதான கிரிஷாந்த குமார என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
லொறியில் இருந்து மரக்கட்டைகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பலகைகள் அவரது மீது விழுந்ததில் கடுமையாக காயமடைந்ததாகவும் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தகவல் கிடைத்ததும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர். உயிரிழந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாணதுறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.