அலஸ்காவில் மாயமான விமானம் – நொறுங்கிய நிலையில் மீட்பு

Date:

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில், உன லக்லீட் விமான நிலையத்திலிருந்து நோம் நகருக்கு செஸ்னா 208B என்ற சிறிய ரக விமானம் விமானி உட்பட 10 பேருடன் புறப்பட்டுச்சென்றது.

எனினும், விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம், நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவிய நிலையில், விமானத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, விமானத்தை தேடும் பணியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஹெச்-130 ஹெர்குலஸ் விமானம் ஈடுபடுத்தப்பட்டன. ஆனாழும் மோசமான வானிலை காரணமாக தேடுதல் வேட்டையில் சிரமம் ஏற்பட்டது.

நோம் நகரிலிருந்து தென்கிழக்கே 48 கிலோமீட்டர் தொலைவில் விமானம் காணாமல் போனதாக கடலோர காவற்படை தெரிவித்திருந்ததை தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், விமானம் அலஸ்கா கடலில் உறைந்திருந்த பனியில் விழுந்து நொறுங்கி கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விபத்தில் பயணித்த 10 பேரும் மீட்புக்குழுவினரால் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்கள் மீட்டுக்கப்பட்டுள்ளன.

விமானத்தின் கடைசி சிக்னல் கிடைத்த பகுதியில் தேடுதல் மேற்கொண்டபோது, ஹெலிகாப்டர்கள் மூலம் விமானத்தின் நொறுங்கிய பாகங்களை கண்டுபிடித்ததாகவும், கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த விமான விபத்து ஏற்பட்டதாகவும் அமெரிக்க கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் மைக் சலெர்னோ தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்