சீனாவின் DeepSeek தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. தமது நாடாளுமன்ற அலுவலகங்களில் இந்த செயலியை பயன்படுத்தக்கூடாது என்றும், அனைத்து ஊழியர்களும் தங்கள் தொலைபேசிகள், கணினிகள் மற்றும் டெப்லெட்டுகளில் DeepSeek ஐ நிறுவ வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
DeepSeek செயலி சில செட்போட்களை பயன்படுத்தி, கணினியில் ஆபத்தான மென்பொருள்களை பதிவேற்றம் செய்யக்கூடியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் மூலம் இணைய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் உருவாகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது, இந்த செயலி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவைத் தொடர்ந்து, இத்தாலி மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் DeepSeek-ற்கு தடை விதித்துள்ளன. மேலும் சில நாடுகள் இந்த செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.



